சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.அரைக்க கொடுக்கப்பபட்டுள்ள பொருட்களை அரைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
- 2
சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்துத் வதக்கவும்.
- 4
இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்.
- 5
பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் தயிர், அரைத்த பேஸ்ட், சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
அடுத்து அதில் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா இலை, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கியதும், வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.
- 7
இப்போது அரிசி சேர்த்து ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும்.
- 8
சிறிது நேரத்திற்கு பின் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறிவிட்டு, எலுமிச்சைச் சாறு ஊற்றி மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பின்னர் பரிமாறவும். சுவையான வாழைப்பூ பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
#BR சைவபிரியர்களுக்கு சத்தான, நிறைவான, ருசியான பிரியாணி!! Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
கோதுமை ரவை பிரியாணி
1.) இவ்வகையான உணவில் குடமிளகாய் சேர்ப்பதால் ஆன்டி ஆக்சிடன்ட்( anti oxidant )முலம் உடலின் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.2.) கோதுமையில் செய்வதால் நார் சத்து அதிகம் உள்ளது.3.) நீரிழிவு நோயாளிகளுக்கு இவ்வுணவு சிறப்பானது.#immunity . லதா செந்தில் -
-
-
-
-
-
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
-
-
வாழைப்பூ வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிவாழைப்பூ விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்ணும் மொறு மொறு வடை .... Raihanathus Sahdhiyya -
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
-
-
-
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
-
-
-
-
-
கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
More Recipes
கமெண்ட்