எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.சுண்டைக்காய் வத்தல் - 1 ஸ்பூன்
  2. 2.வெங்காயம் - 1 (நறுக்கியது)
  3. 3.தக்காளி 🍅 -1
  4. 4.மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  5. 5.மல்லித் தூள் - 2 ஸ்பூன்
  6. 6.மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  7. 7.புளி தண்ணீர் - 1/4 கப்
  8. 8.கடுகு - 1 டீஸ்பூன்
  9. 9.உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  10. 10.வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  11. 11.கறிவேப்பிலை - சிறிது
  12. 12.நல்லெண்ணெய் - தேவையான அளவு
  13. 13.உப்பு - தேவையான அளவு
  14. 14.சாதம் - 1 கப் (குழைந்த்து)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காயை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் அதே வாணலியை வைத்து, சற்று அதிகமான அளவு நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு, சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  4. 4

    குழம்பு சற்று கெட்டியானதும், அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, அதில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி மூடி வைக்கவும்.

  5. 5

    இப்பொழுது சற்று குழைவான சாத்த்தில் இந்த குழம்பை சேர்த்து பிரட்டவும்.பிரட்டும் பொழுது சாதம் மிதமான சூட்டுடன் இருக்க வேண்டும்.

  6. 6

    நன்கு கிளறி 1 மணிநேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் எடுத்து கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes