இட்லி நூடுல்ஸ்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வேக வைத்த இட்லி பத்து
  2. கேரட் நீளாக்கில் வெட்டியது கால் கப்
  3. பெ.வெங்காயம் இரண்டு
  4. முட்டை கோஸ் துருவியது கால் கப்
  5. முட்டை 4
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. உப்பு தே.அளவு
  8. எண்ணெய் தே.அளவு
  9. மிளகு தூள் ஒரு ஸ்பூன்
  10. ப.மிளகாய் மூன்று
  11. மல்லி இலை சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் உள்பட காய்களை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    இட்லியை அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்தூ நீளவாக்கில் வெட்டவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு முட்டையை உப்பு சேர்த்து கலக்கி ஊற்றி கிளறி தனியே வைக்கவும்.

  4. 4

    மற்ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்.ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இலேசாக வதங்கியதும் நீளமாக நறுக்கிய காய்களை உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.

  6. 6

    அதில் இஞ்சி பூண்டு விழுது.மிளகுத்தூள் சேர்த்து புரட்டி கிளறி வைத்த முட்டை கலவையை சேர்க்கவும்.

  7. 7

    எல்லாம் நன்கு கலந்து கடைசியாக வெட்டி வைத்த இட்லி துண்டுகளை சேர்த்து உடையாமல் கலந்து கிளறி விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes