கல்யாண கறிக்குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு.ஏலம் சேர்த்து தாளிக்கவும்.
- 2
அதில் வெங்காயம்.ப.மிளகாய் வெட்டி சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டுவிழுது ம.தூள்.மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- 4
தேங்காயை துருவி மிக்சியில் இட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு முதல் பால் அரை கப் எடுக்கவும்
- 5
மேலும் ஒரு கப் தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாம் பால் ஒரு கப் எடுக்கவும்.
- 6
குக்கரில் மட்டனை கழுவி சேர்த்து இரண்டாம் பால் ஊற்றி மூன்று விசில் வைத்து வேக விடவும்.
- 7
குக்கரை திறந்து உப்பு சேர்த்து உ.கிழங்கை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக போட்டு கறி மசாலா தூள் சேர்த்து மேலும் ஒரு விசில் வைத்து வேக விடவும்.
- 8
பிறகு குக்கரை திறந்து முதல் தே.பால் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட்