சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு.உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.
- 2
ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி பெ.வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
அதனுடன் ப.மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- 4
அதில் உப்பு.மி.தூள்.ம.தூள் சேர்த்து அதனுடன் கொத்துக்கறி சேர்த்து மிதமான தீயில் கிளறவும்
- 5
கறி வெந்து தண்ணீர் வற்றியதும் உதிர்த்த உ.கிழங்கை சேர்த்து கிளறி தனியே ஆற வைக்கவும்.
- 6
ஊறிய கோதுமை மாவை சப்பாத்திகளாக திரட்டி நடுவில் மசாலாவை வைத்து நான்கு பக்கமும் மடித்து அழுத்தி ஒட்டவும்.
- 7
ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்ளி முர்தபாக்களை இருபுறமும் புரட்டி போட்டு சுட்டு எடுக்கவும்.
- 8
சுவையான முர்தபா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
கமெண்ட் (2)