பச்சை பயறு ஸ்டஃப்டு  சப்பாத்தி

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#குழந்தைகள் டிபன் ரெசிபி

காலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி.

பச்சை பயறு ஸ்டஃப்டு  சப்பாத்தி

#குழந்தைகள் டிபன் ரெசிபி

காலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. சப்பாத்தி மாவு பிசைய:
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 1/2டீஸ்பூன் உப்பு
  4. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 1/2 கப் தண்ணீர்
  6. ஸ்டஃப் செய்ய:
  7. 1/2 கப் பச்சைபயறு
  8. 1 உருளைக்கிழங்கு
  9. 1 பெரிய வெங்காயம்
  10. 1டீஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது
  11. தேவையானஅளவு உப்பு
  12. 1/4டீஸ்பூன் மஞ்சள் பொடி
  13. 1/2டீஸ்பூன் மல்லி தூள்
  14. 1/2டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  15. 1/4டீஸ்பூன் சீரக பொடி
  16. 1/2டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  17. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  18. சப்பாத்தி வாட்ட தேவையான நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவு,உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    பச்சை பயறை வேக வைத்து வடித்து கொள்ளவும். பின் அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசித்து கொள்ளவும்

  3. 3

    பானில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்

  4. 4

    சிறிது வதங்கியதும் மல்லி தூள், கரம் மசாலா தூள்,சீரகதூள் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதனுடன் மசித்த பச்சை பயறு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும். ஸ்டஃப்பிங் ரெடி.

  6. 6

    மாவை உருண்டைகளாக பிரித்து கொண்டு பிறகு கனமாக தேய்த்து கொள்ளவும்.

  7. 7

    அதன் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் ஸ்டஃப்பிங்கை வைத்து மூடி மாவு தொட்டு மீண்டும் சிறிது கனமாக தேய்த்து கொள்ளவும்.

  8. 8

    இதே போல அனைத்து சப்பாத்திகளையும் ஸ்டப்பிங் செய்து கொள்ளவும்

  9. 9

    தோசை கல்லில் ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு சிறிது நெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes