பாசிப்பயறு சக்கரை பணியாரம்

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#தமிழர்களின் பாரம்பரிய சமையல்

தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதிகளில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை இது. பச்சைபயறு மற்றும் வெல்லம் சேர்த்து இருப்பதால் சத்தானது

பாசிப்பயறு சக்கரை பணியாரம்

#தமிழர்களின் பாரம்பரிய சமையல்

தமிழ்நாட்டில் திருப்பூர் பகுதிகளில் பாரம்பரியமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை இது. பச்சைபயறு மற்றும் வெல்லம் சேர்த்து இருப்பதால் சத்தானது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பச்சை பயறு
  2. 3 டேபிள் ஸ்பூன் புழுங்கல் அரிசி
  3. 1/4 கப் பொட்டு கடலை
  4. 1 கப் பொடித்த வெல்லம்
  5. உப்பு சிட்டிகை அளவு
  6. 1/2டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  7. எண்ணெய் பொரிக்க
  8. 1/2 கப் அரிசி மாவு
  9. 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  10. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெறும் கடாயில் பச்சை பயறு மற்றும் புழுங்கலரிசியை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் மிக்சியில் இந்த இரண்டையும் பொட்டு கடலையுடன் சேர்த்து பொடித்து கொள்ளவும்

  3. 3

    வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்

  4. 4

    மாவில் ஏலக்காய் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  5. 5

    வெல்ல நீரை மாவில் விட்டு பிசைந்து உருட்டி கொள்ளவும்.இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  6. 6

    வேறு பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்

  7. 7

    பச்சை பயறு உருண்டைகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes