கீரை ஆம்லேட்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#கீரைவகை உணவுகள்.
#குக்ப்படீல் என் முதல் உணவு வெளியிடு

சுத்தம் செய்த கீரை, வெங்காயம், குடைமிளகாய் நறுக்கிக்கொள்ளவும். தவாவில் எண்ணெய் சேர்த்து சீரகம் வெங்காயம், குடைமிளகாய் , கீரை சேர்த்து வதக்கவும். முட்டையுடன் , உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், வதக்கிய கீரை சேர்த்து கலக்கி தவாவில் வேக வைத்து பரிமாறவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
3 பரிமாறுவது
  1. 3முட்டை
  2. 1 சிறியதுவெங்காயம் - (நறுக்கியது)
  3. குடைமிளகாய்- சிறிய பகுதி (நறுக்கியது)
  4. 1 கைப்பிடிபாலக்கீரை -
  5. 1/2 கைப்பிடிசிகப்பு பாலக்கீரை -
  6. 1/2 கைப்பிடிஇலைகோசு கீரை -
  7. 1/4 தேக்கரண்டிமிளகுத்தூள் -
  8. சீரகத்தூள் -
  9. உப்பு‌- தேவையான அளவு
  10. 2 மேஜைக்கரண்டிஆலிவ் எண்ணெய்-
  11. 1/2 தேக்கரண்டிசீரகம் -

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    கீரையை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

  2. 2

    ஒரு தவாவில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 1 நிமிடம்வரை‌ வதக்கவும்.

  3. 3

    பின்பு கீரையை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். 1/4 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் 3 முட்டையுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், வதக்கிய கீரையை சேர்த்து நன்கு அடித்து கலக்கிக் கொள்ளவும்.

  5. 5

    பின்பு தவாவில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கீரை முட்டை கலவையை சேர்க்கவும். பாதி வெந்ததும் ஆங்காங்கே கிளறவும்.

  6. 6

    மூடி போட்டு 4 நிமிடம் வேகவிடவும். பின்பு தவாவில் மேல் ஒரு தட்டு வைத்து ஆம்லேடை திருப்பி போட்டு அடுப்பை அணைக்கவும்.

  7. 7

    கீரை ஆம்லேட் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes