பாலக் பன்னீர்/ palak paneer recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

பாலக் பன்னீர்/ palak paneer recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 150 கிராம் பன்னீர்
  2. 1 கப் பாலக்கீரை
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 துண்டு இஞ்சி
  7. 5 பல் பூண்டு
  8. 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  9. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  11. 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  12. தேவையானஅளவு உப்பு
  13. தேவையானஅளவு எண்ணெய்
  14. 1/4 டீஸ்பூன் சீரகம்
  15. 1பிரியாணி இலை
  16. 2 கிராம்பு
  17. ஒரு துண்டு பட்டை
  18. ஒரு கல்பாசி பூ

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    தேவையான பொருட்கள்
    முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக்கொள்ளவும் பிறகு பாலக் கீரையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பிறகு பாலக் கீரையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வேகவைத்த பாலக்கீரையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஒரு துண்டு இஞ்சி 2 பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து

  4. 4

    பட்டை கிராம்பு கல்பாசி பூ பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும் பிறகு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பூண்டு புரிந்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்

  6. 6

    அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  7. 7

    வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த பாலக் கீரையை சேர்த்து வதக்கி

  8. 8

    அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறி

  9. 9

    பிறகு பன்னீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும் சுவையான பாலக் கீரை பன்னீர் தயார்

  10. 10

    பாலக் பன்னீர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes