எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மசாலா அரைப்பதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும் பிறகு 5 பல் பூண்டு
- 2
ஒரு துண்டு இஞ்சி 2 தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 3
ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
மசாலா வதங்கிய பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கால் கப் தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு
- 5
ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும் பிறகு கத்தரிக்காய் வதக்கு வதற்கு ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து
- 6
படத்தில் காட்டியவாறு கத்தரிக்காயை நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கவும் ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கத்தரிக்காயை வதக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
- 7
பிறகு அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து வெந்தயம் சோம்பு சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்த மசாலா சேர்த்து
- 8
இரண்டு நிமிடங்கள் வதக்கி பின்பு கால் கப் புளிக்கரைசல் சேர்த்து குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
- 9
தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு வதக்கி வைத்த கத்தரிக்காயை சேர்த்து
- 10
நன்றாக கிளறி மூடி வைத்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாகக் கொதிக்கவைக்கவும்
- 11
பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்
- 12
சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு / Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2...கார குழம்பு அல்லது வத்த குழம்பு எல்லோரும் விரும்பி சாதத்தில் பிசைந்து சாப்பிடும் குழம்பு .. அதுவும் எண்ணெய் கத்திரிக்காயில் செய்யும்போது சுவை இரட்டிப்பு... Nalini Shankar -
-
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Grand2என்னுடைய ஸ்பெஷல் ரெசிபி இது. Meena Ramesh -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(Ennai Kathirika Kulambu Recipe in Tamil)
#அம்மா#goldenapron3#nutrient2 என் அம்மாவிற்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு மிகவும் பிடிக்கும். என் வீட்டிற்கு வந்தால் அதை என் கையால் வைத்து தர சொல்வார். அன்னையர் தினத்தன்று என் அம்மாவும் என்ன கத்திரிக்காய் குழம்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். A Muthu Kangai -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennai kathirikkaai kulambu recipe in tamil)
மணக்க மணக்க சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு#hotel#goldenapron3 Sharanya -
-
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
More Recipes
- முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil
- மாங்காய் வத்தக்குழம்பு / mango Vathakulambu Recipe in tamil
- சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
- கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு / Kattirikkay poricca kulampu Recipe in tamil
- சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
கமெண்ட்