கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

கடலை மாவு பர்பி (besan burfi recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 1-1/2கப் கடலை மாவு
  2. 1/2கப் நெய்
  3. 1/2கப் பொடித்த சர்க்கரை
  4. சிறிதளவுஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் கடலை மாவு நெய் சேர்த்து நன்றாக வறுக்கவும் முதலில் கட்டி கட்டியாக இருப்பது போல் தான் தெரியும் பார்ப்பதற்கு நெய் அளவு குறைவாக தெரியும் ஆனால் வறுக்கவறுக்க நெய் நிறைய மாவிலிருந்து கசிந்து வரும்..

  2. 2

    இந்த ரெசிபி குறைவான தீயிலேயே செய்ய வேண்டும் கூட்டி வைத்தால் கருகிவிடும்.. வறுபட ஆரம்பிக்கும்போது முதலில் லேசாக நெய் வரும் பிறகு நன்றாக தண்ணீர் போல் ஆகிவிடும்..

  3. 3

    மிக்ஸி ஜாரில் சர்க்கரையை சேர்த்து பொடி செய்து அதை கடலை மாவுடன் சேர்த்து நன்றாக கிளறவும்..

  4. 4

    விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்க்கலாம் நான் சிறிது கேசர் கலர் சேர்த்துள்ளேன்.. இறுதியாக சுருண்டு வந்ததும் நெய் தடவிய ட்ரேயில் கொட்டி மேலே நட்ஸ்கள் சேர்த்து அலங்கரிக்கவும்..

  5. 5

    நன்றாக ஆறவிட்டு துண்டுகள் போடவும்.. இந்த பர்பி வெட்டும்போது அவ்வளவு அருமையாக இருக்கும்..

  6. 6

    நான் சதுரமாக கட் செய்துள்ளேன் நீங்கள் விருப்பப்பட்ட வடிவில் கட் செய்து கொள்ளலாம்..

  7. 7

    இப்போது அருமையான சுவையான இனிப்பான கடலை மாவு பர்பி தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes