நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)

Fma Ash
Fma Ash @cook_20061862

என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!

எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.
#cake

நாவில் கரையும் சாக்லேட் கேக்...! (Most Amazing Chocolate Cake recipe in tamil)

என் காதல் கணவருக்காக செய்த காதலர்தின ஸ்பெஷல் கேக்!

எப்போதும் அன்பானவர்களுக்காக சமைக்கும் போது, அதீத காதலுடன் சமைத்தால், அதில் கிடைக்கும் ருசியோ தனி. சாக்லேட் கேக்கில் இன்ஸ்டன்ட் காபி சேர்ப்பது, விருப்பத்துக்குரியதே..! ஆனால் காபி சாக்லேட் சுவையை அதிகரிக்கும். சிறந்த சாக்லேட் பவுடரை தேர்வு செய்யுங்கள்.
#cake

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

01 மணித்தியாலம்.
05 நபர்கள்
  1. கேக் தயாரிக்க தேவையான உலர் பொருட்கள் :
  2. 1 3/4 கப் கோதுமை மா
  3. 2 கப் சர்க்கரை
  4. 1 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1டீஸ்பூன் பேக்கிங் சோடா [அப்பச்சோடா]
  6. 1/2டீஸ்பூன் உப்பு
  7. 1 கப் கொக்கோ பவுடர் [இனிப்புச்சுவையற்றது]
  8. 2.2 கிராம் இன்ஸ்டன்ட் காபி [புரூ]
  9. கேக் தயாரிக்க தேவையான திரவப் பொருட்கள் :
  10. 1/2 கப் மரக்கறி எண்ணெய்
  11. 2டீஸ்பூன் வெனிலா எஸ்சென்ஸ்
  12. 2 முட்டை
  13. 1 கப் முழு ஆடைப் பால்
  14. 2 ஸ்பூன் வெந்நீர்
  15. சாக்லேட் சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் :
  16. 1/2 கப் கொக்கோ பவுடர் [இனிப்புச்சுவையற்றது]
  17. 3/4 சர்க்கரை
  18. 1 கப் பால்
  19. 2 ஸ்பூன் வெண்ணெய் [விரும்பினால் சேர்க்கவும்]
  20. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)
  21. (டீஸ்பூன் = தேக்கரண்டி)
  22. (1 கப் = 250 மில்லிலீட்டர்)
  23. (1 கப் = 128 கிராம்)
  24. (1/2 கப் = 125 மில்லிலீட்டர்)
  25. (1/2 கப் = 64 கிராம்)
  26. (3/4 கப் = 187.5 மில்லிலீட்டர்)
  27. (3/4 கப் = 96 கிராம்)
  28. பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா என்பன வேறுபட்ட பொருட்களாகும்
  29. நீங்கள் விரும்பிய இன்ஸ்டன்ட் காபியை பயன்படுத்தலாம். நான் புரூவைப் பயன்படுத்தியுள்ளேன்

சமையல் குறிப்புகள்

01 மணித்தியாலம்.
  1. 1

    முதல் படி
    பேக்கிங் பேனை தயார் செய்தல்.

    * 9” பேக்கிங் பேனுக்கு எண்ணெய் பூசிக்கொள்ளவும். (நான் வட்டவடிவான பேக்கிங் பேனைப் பயன்படுத்தியுள்ளேன். உங்களுக்கு பிடித்த வடிவத்தைப் பயன்படுத்தலாம்)

    * சிறிதளவு கோதுமை மா அல்லது கொக்கோ பவுடரை தூவிக்கொள்ளவும்.

    * மேலதிகமான மாவை தட்டவும்.

  2. 2

    இரண்டாம் படி
    பேக்கிங்

    * முதலில் ஓவனை 360°F/180°C இல் 10 நிமிடங்கள் வரை சூடாக்கிக் கொள்ளவும்.

    * உலர் பொருட்களை நன்றாக சலித்து வைக்கவும்.

    * பாத்திரமொன்றில் கோதுமை மா, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை கலக்கவும்.

  3. 3

    மரக்கறி எண்ணெய், வெனிலா எஸ்சென்ஸ் மற்றும் முட்டை என்பவற்றை சேர்க்கவும்.

    * சர்க்கரை நன்றாக கரைந்து, கேக் கலவை மென்மையாகவும், கிறீமியாகவும் மாறும் வரை கலந்து கொள்ளவும்.

  4. 4

    பிறிதொரு பாத்திரத்தில் பாலையும் கொக்கோ பவுடரையும் சேர்த்து கலக்கவும்.

    * சிறிய கிளாஸில் வெந்நீர் மற்றும் புரூவை சேர்த்து நன்கு கலந்து, அதை பால் மற்றும் கொக்கோ பவுடர் கலவைக்குள் ஊற்றி, கட்டிகள் உருவாகாமல் நன்றாக கலந்து கொள்ளவும்.

  5. 5

    கலந்து வைத்த கொக்கோ கலவையை மாக்கலவைக்குள் ஊற்றி, கலந்து கொள்ளவும். அதிகமாகவும் கலக்க கூடாது.

  6. 6

    கேக் கலவையை பேனில் சமனாக ஊற்றி, 180°C இல் 35 - 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

    * உட்புறத்தில் பேக் ஆனதை உறுதிப்படுத்த டுத்பீக் அல்லது முட்கரண்டியை உட்செலுத்தினால், கேக் ஒட்டாமல் இருக்க வேண்டும்.

    * 10 நிமிடங்கள் வரை கேக்கை ஆறவிட்டு பின்னர் பேனிலிருந்து கேக்கை அகற்றவும்.

  7. 7

    மூன்றாம் படி
    சாக்லேட் சாஸ் தயாரித்தல்.

    * கொக்கோ பவுடரையும், சர்க்கரையும் சேர்த்து, கட்டிகள் இன்றி கலக்கவும்.

    * அடுப்பில் ஒரு வானலையை வைத்து, கொக்கோ கலவை, பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.

  8. 8

    அவ்வளவுதான் சாக்லேட் சாஸ் தயார்.

  9. 9

    இறுதியாக சாக்லேட் கேக் மீது சாக்லேட் சாஸை ஊற்றி அதன் மேல் விரும்பினால், சாக்லேட் துருவல் அல்லது பெராரோ சாக்லேட் வைத்து அழகு படுத்தலாம்.

    * நாவில் கரையும் சாக்லேட் கேக் ரெடி. கேக்கை வெட்டி அன்பானவர்களுடன் உண்டு மகிழுங்கள்.

  10. 10
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes