தேங்காய் பால் குருமா/ Kerala  Vegetable Stew

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

ஆப்பத்திற்கு சிறந்த காம்பினேஷன்

தேங்காய் பால் குருமா/ Kerala  Vegetable Stew

ஆப்பத்திற்கு சிறந்த காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் பொடியாக நறுக்கிய கேரட்
  2. 1 கப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு
  3. 1/2 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  4. 1/2 கப் பச்சை பட்டாணி
  5. 1 வெங்காயம்
  6. 1/2இஞ்சி பூண்டு விழுது
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1 பட்டை லவங்கம் 2 ஏலக்காய் ஒரு பிரெஞ்சு
  9. 1டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  10. 1/2 கோப்பை தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி பட்டை, லவங்கம்,ஏலக்காய் &பிரிஞ்சி இலை தாளித்து 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு வதக்கி கொள்ளவும்.

  2. 2

    பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி & உருளைக்கிழங்கு இவை நான்கையும் அதில் சேர்த்து நன்கு வதக்கி, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்.

  3. 3

    ஒரு ஒரு மூடி துருவிய தேங்காயை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து பால் எடுத்து, அதை வடித்து பால் எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    விசில் அடங்கியதும் தேங்காய் பாலை அதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.அடுப்பை அணைத்து சிறிது பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை தூவி சூடாக ஆப்பம் சுட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes