வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

#keerskitchen

வயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள்.

வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்

#keerskitchen

வயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 8 டம்ளர் தேங்காய் பால்
  2. 3 டம்ளர் அரிசி
  3. 2 கேரட்
  4. 2உருளைக்கிழங்கு
  5. 2 பெரிய வெங்காயம்
  6. ஒரு கைப்பிடி பச்சை பட்டாணி
  7. 10 பீன்ஸ்
  8. 4 பச்சை மிளகாய்
  9. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  10. தேவையான அளவு எண்ணெய்
  11. 5 ஸ்பூன் நெய்
  12. 1கைப்பிடி கொத்தமல்லி
  13. ஒரு கைப்பிடி புதினா
  14. சிறிதளவுபட்டை பூ லவங்கம் இலை ஏலக்காய்
  15. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வெங்காயம் உருளைக்கிழங்கு பீன்ஸ் கேரட் அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பிறகு ஏலக்காய் பட்டை லவங்கம் இலை சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு மிக்ஸியில் இஞ்சி பூண்டை சிறிதாக நறுக்கி அரைத்து இரண்டு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும் நீள நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    பிறகு பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து கிளறிக் கொள்ளவும்

  6. 6

    தேங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பிறகு வடிகட்டிய தேங்காய் பாலை சேர்க்கவும் சேர்த்து நன்கு கிளறிவிடவும்

  8. 8

    பிறகு ஒரு கைப்பிடி கொத்தமல்லி ஒரு கைப்பிடி புதினா சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    சாப்பாட்டு அரிசியை நன்கு அலசி அதையும் சேர்த்துக் கொள்ளவும் கடைசியாக ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி விடவும்

  10. 10

    குக்கரை மூடி 3 விசில் விடவும்
    பிறகு அதை 5 நிமிடம் வைத்து விசில் அடங்கியவுடன் எடுத்து கிளறி விடவும்

  11. 11

    சுவையான வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes