பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai

#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.

பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)

#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1பச்சைக் கத்தரிக்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 கொத்து கறிவேப்பிலை
  4. 1 ஸ்பூன் வத்தல் தூள்
  5. 1 ஸ்பூன் மல்லித் தூள்
  6. ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
  10. தேவைக்கு உப்பு
  11. தேவைக்கு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பச்சை கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு மற்றும் உளுந்து சேர்த்து தாளிக்க வேண்டும்.

  2. 2

    இப்பொழுது அதில் பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் வதங்கிய பின்பு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  3. 3

    வதங்கிய பின்பு அதில் நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    சுவையான மற்றும் மிகவும் சத்தான பச்சை கத்தரிக்காய் பொரியல் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes