தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#Nutrient2
தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .
எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)

#Nutrient2
தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .
எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி சாதம்
  2. உப்பு
  3. தாளிக்க
  4. 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  5. 2டீஸ்பூன் நெய்
  6. 1டீஸ்பூன் கடுகு
  7. 1டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  8. 1டேபிள் ஸ்பூன்கடலை பருப்பு
  9. 8முந்திரி
  10. 1/2மூடி துருவிய தேங்காய்
  11. 1பச்சை மிளகாய்
  12. 3வரமிளகாய் கிள்ளி வைத்து
  13. பெருங்காயம்
  14. கருவேப்பிலை
  15. கொத்தமல்லி தழை
  16. வறுத்த பொடி சேர்க்க
  17. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  18. 1டீஸ்பூன் வெள்ளை எள்ளு

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    பச்சரிசி 1 கப் வடித்து வைக்கவும்.சாதம் ரெடி தேங்காய் 1/2 மூடி துருவி வைக்கவும்.

  2. 2

    உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,1 டீஸ்பூன் வெள்ளை எள்ளு வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

  3. 3

    தாளிக்க கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,முந்திரி 8,பச்சை மிளகாய் 1 கழுவி நறுக்கி வைக்கவும்,வரமிளகாய் 3 கிள்ளி வைக்கவும். பெருங்காயம் சிறிது, கருவேப்பிலை கொத்தமல்லி எடுத்து வைக்கவும்.கடாயில் தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்,நெய் 2 டீஸ்பூன் சேர்த்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து உப்பு சேர்த்து கிளறவும்.

  4. 4

    வறுத்ததை ஒரு கிண்ணத்தில் சேர்த்து வைத்து வடித்த சாதம் போட்டு,கிளறி பொடித்து வைத்த பொடியை சேர்க்கவும்.

  5. 5

    பொடி சேர்ப்பதால் தேங்காய் சாதம் சுவை மேலும் அதிகரித்து நன்றாக இருக்கும்.கலக்கி விடவும்.

  6. 6

    சுவையான தேங்காய் சாதம் ரெடி.தேங்காய் சட்னி அப்பளம் வடகம் பொரித்து வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
All time favourite recipie to me... instant recipie too..

Similar Recipes