ஓமப்பொடி(Omapodi recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

* ஓமம் அஜீரணம், பசியின்மை, வயிறு பிரச்சனை போன்றவைகளை தீர்க்கக் கூடியது.

* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தின்பண்டம் என்றால் அது இந்த ஓமப்பொடி தான்.

*இதை நம் வீட்டிலேயே எளிதாக செய்து நாம் அசத்தலாம்.

#ILoveCooking

ஓமப்பொடி(Omapodi recipe in Tamil)

* ஓமம் அஜீரணம், பசியின்மை, வயிறு பிரச்சனை போன்றவைகளை தீர்க்கக் கூடியது.

* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தின்பண்டம் என்றால் அது இந்த ஓமப்பொடி தான்.

*இதை நம் வீட்டிலேயே எளிதாக செய்து நாம் அசத்தலாம்.

#ILoveCooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் கடலை மாவு
  2. 1/4 கப் அரிசி மாவு
  3. 1 டேபிள் ஸ்பூன் ஓமம்
  4. ஒரு சிட்டிகைமஞ்சள் தூள்
  5. 1/2 டேபிள்ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  8. 2 டேபிள் ஸ்பூன் நெய்(இளம் சூடாக இருக்க வேண்டும்)
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் ஓமத்தை பொடியாக அரைத்து சலித்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள், பெருங்காயத் தூள்,சலித்து வைத்துள்ள ஓமப்பொடி, நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து பிசைந்து வைத்துள்ள மாவை இடியாப்ப அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்தால் மொறுமொறுப்பான ஓமப்பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes