வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1-1/4 கப் பச்சரிசி
  2. 1/2 கப் பாசிப்பருப்பு
  3. 3 டேபிள்ஸ்பூன் நெய்
  4. 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  5. 2 டீஸ்பூன் மிளகு
  6. 2 டீஸ்பூன் சீரகம்
  7. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 2-4 பச்சை மிளகாய்
  9. கறிவேப்பிலை
  10. உப்பு
  11. 5 கப் தண்ணீர்
  12. சிறிதுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் ஒன்றாக இரண்டு முறை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் நெய் விட்டு சூடாக்கி அதில் மிளகு, சீரகம் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும் (குழந்தைகள் இருப்பது விழுதாக சேர்த்துள்ளேன் உங்களுக்கு வேண்டாம் என நினைத்தால் இஞ்சியும் பூண்டும் தட்டி சேர்த்துக் கொள்ளலாம்)

  3. 3

    பிறகு இதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

  4. 4

    தண்ணீர் கொதித்து வரும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பிறகு ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும்.. பிறகு குக்கரை மூடி மிதமான தீயில் 5 விசில் வேகவிட்டு எடுக்கவும்

  5. 5

    பிறகு குக்கரை திறந்து மெதுவாக மசித்து விடவும்

  6. 6

    சுவையான வெண்பொங்கல் தயார் இதனை சட்னி, சாம்பார், வடையுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes