பைனாப்பிள் கீர் (Pinapple kheer recipe in tamil)

ராகவி சௌந்தர்
ராகவி சௌந்தர் @cook_26935048

பைனாப்பிள் கீர் (Pinapple kheer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-25 நிமிடம்
3 நபர்
  1. 1/4 கப்பைனாப்பிள் பொடியாக நறுக்கியது
  2. 1/2 லிட்டர் பால்
  3. 1/4 கப் கன்டென்ஸ்டு மில்க்
  4. வறுத்த முந்திரி திராட்சை 2 டேபிள்ஸ்பூன்
  5. 1/4 கப்சேமியா
  6. 3 சொட்டு மஞ்சள் கலர்

சமையல் குறிப்புகள்

20-25 நிமிடம்
  1. 1

    நறுக்கிய பைனாப்பிளில் பாதியை கூழாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

  3. 3

    பால் கொதி வந்ததும் அதனுடன் சேமியா சேர்க்கவும்

  4. 4

    மற்றொரு கடாயில் நறுக்கிய மற்றும் அரைத்த பைனாப்பிள் அதனுடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.

  5. 5

    சேமியா வெந்தவுடன் அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்து லேசாக கெட்டியானதும் வறுத்த முந்திரி திராட்சை மஞ்சள் கலர் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்.

  6. 6

    பாலும் பைனாப்பிள் கலவையும் நன்கு ஆறியதும் ஒன்றாக சேர்த்து கலந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து நன்கு குளிர்ந்த உடன் பரிமாறவும்.

  7. 7

    சுவையான பைனாப்பிள் கீர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ராகவி சௌந்தர்
அன்று

Similar Recipes