எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. ஏலக்காய்த்தூள்
  3. நெய்
  4. எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு
  5. 3/4 கப் வெல்லம்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஒரு துணியில் காய வைத்து அதை மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து எடுக்கவும். அரைத்த மாவை சலித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    வெள்ளத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து,வெல்லம் கரைந்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.அதில் சிறிது ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    சலித்து வைத்துள்ள ஈர அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக வெல்லப்பாகை சேர்த்து மாவு தயாரிக்கவும்.மாவு இளகி விட்டால் ஒரு நாள் அல்லது 2 நாள் மூடி வைத்து அதன் பின் அதிர்சம் தட்டி சுடவும். மாவு சரியான பதத்தில் இருந்தால் உடனடியாகவும் சுடலாம்.

  4. 4

    முதல் தடவை அதிரசம் செய்ய விரும்புவோர் இந்த செய்முறை ல் கொடுக்கப்பட்டுள்ள அளவின்படி செய்து பார்க்கவும். இந்த அளவிற்கு ஆறு அதிரசம் வரும்.சூடானதும் மிகவும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொன்றாக அதிரசம் சுட்டெடுக்கவும் சுற்றி எடுத்து அதிரசத்தை என்னை வடிகட்டி வைத்து வடிகட்டி ஒரு கப் அல்லது டபரா வைத்து அதில் இருக்கும் மிதமான எண்ணெய் எடுத்து விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes