ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#Immunity
எங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 4 ஆட்டுக்கால்
  2. 100 கிராம் சின்ன வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1 தேக்கரண்டி மிளகு
  6. 1 தேக்கரண்டி சீரகம்
  7. 1 துண்டு பட்டை
  8. 3 ஏலக்காய்
  9. 3 கிராம்பு
  10. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1 தேக்கரண்டி நெய்
  12. 3 தக்காளி
  13. 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
  14. 2 கொத்து கறிவேப்பிலை
  15. 3/4 லிட்டர் தண்ணீர்
  16. 2 மேஜைக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்த ஆட்டுக்காலை தண்ணீருடன் சேர்க்கவும். இதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை கிராம்பு ஏலக்காய், சீரகம், மிளகு நறுக்கிய கொத்தமல்லி இலைகள், கருவேப்பிலை, அரைத்த தக்காளி இவை அனைத்தையும் சேர்க்கவும்.

  2. 2

    கூடவே மஞ்சள் தூள், உப்பு மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 45 நிமிடம் குறைவான தீயில் வேக விடவும். குக்கர் சூடு தணிந்த பின் சூப்பை சூடாக பரிமாறவும். இந்த சூப்பை வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் பலம் பெறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்.

  3. 3

    இந்த சூப்பை இட்லி இடியாப்பம் தோசை போன்ற உணவுகளில் நீர்க்க பிசைந்து சாப்பிட்டால் சுவையும் ஆரோக்கியமும் கூடும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். காலை 11 மணி அளவில் சூடாக டீ குடிப்பது போல இதனை கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes