மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

மட்டன் உப்பு கறி (Mutton uppu kari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. அரை கிலோமட்டன்
  2. 30சின்ன வெங்காயம்
  3. 20வர மிளகாய்
  4. 20பூண்டு பல்
  5. மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. அரை தக்காளி
  8. கறிவேப்பிலை
  9. நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மட்டன் ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வெங்காயம் பூண்டு தக்காளி அனைத்தையும் தயார் பண்ணி கொள்ளவும். ஒரு கடாயில் என்னை சேர்த்து காய்ந்ததும் வர மிளகாய் சேர்க்கவும்

  2. 2

    பின் அதில் பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பின் அதில் கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்க்கவும்

  3. 3

    பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளவும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு அனைத்தையும் வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    பின் அதில் மட்டனை சேர்த்து நன்கு கலந்து விடவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின் மட்டனை மூடிபோட்டு வைத்து நன்கு வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்

  5. 5

    மட்டன் தண்ணீர் குறைந்து நன்கு சுருள கிண்டி கொண்டே இருக்கவும். மிகவும் சுவையான மட்டன் உப்பு கறி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes