குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4பேர்
  1. 200கிராம் குலாப்ஜாமூன் மிக்ஸ் பவுடர்
  2. 500கிராம் சர்க்கரை
  3. 5 ஏலக்காய்
  4. 400மில்லி தண்ணீர்
  5. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    குலோப்ஜான் மிக்ஸை நன்றாக சலித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். தண்ணீர்க்கு பதில் காய்ச்சி ஆறிய பாலைக் கொண்டு மிருதுவாக பிசைந்து கொள்ளலாம். இதன் மேல் சிறிது நெய் தடவினால் மாவு காயாமால் இருக்கும். இந்த மாவை10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

  2. 2

    நாம் சர்க்கரை பாகை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

  3. 3

    10 நிமிடத்திற்குப் பிறகு பிசைந்த மாவை தேவைக்கு ஏற்ப சிறிய அல்லது பெரிய உருண்டைகளாக செய்து கொள்ளவும். மாவு விரிசல் விடாமல் இருக்க கையில் எண்ணெய் அல்லது நெய்யை தடவி கொண்டு மிருதுவாக உருட்டவும்.

  4. 4

    தேவையான அளவு எண்ணெய் ஊற்றி லேசாக காய்ந்தவுடன் செய்து வைத்துள்ள உருண்டைகளை சிறிய தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

  5. 5

    500கிராம் சர்க்கரையை எடுத்துக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கி சர்க்கரை கரைந்ததும் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். சக்கரை பாகு பிசுக்கு பதம் வந்தவுடன் தனியாக இறக்கி வைத்துக்கொள்ளவும். பொரித்த ஜாமுன் களை ஜீராவில் சேர்த்து குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes