பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)

#jan2
பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது.
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2
பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது.
சமையல் குறிப்புகள்
- 1
சிறிய வெங்காயம் தோலுரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய சைஸ் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கப் துவரம் பருப்பை கழுவி தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரஸர் பாணில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் தாளிக்க வேண்டிய கடுகு உளுத்தம் பருப்பு வர மிளகாய் தாளித்துக் கொள்ளவும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே பிரஸர் பாநில் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
- 2
சீரகம் பொரிந்தவுடன் அதில் சிறிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு கீரையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 3
பிறகு கீரையில் வெந்த பருப்பு சாம்பார் தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.அரை டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அரைத்து வைத்த புளி தண்ணீரை கொஞ்சமாக சேர்த்து கொதிக்க வைக்கவும். குழி கரண்டி அளவு புளி தண்ணீர் போதும். நிறைய புளித் தண்ணீர் சேர்த்தால் கீரை சுவை மாறிவிடும். நன்கு கொதிக்க விடவும். கொஞ்சம் கெட்டியாக குழம்பு வைத்துக் கொள்ளவும். நீர்க்க வைக்க வேண்டாம். பிறகு தாளித்தவற்றை சேர்க்கவும். சுவையான ஆரோக்கியமான பொன்னாங்கண்ணி கீரை குழம்பு தயார்.
Similar Recipes
-
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
பாசிப்பருப்பு பொன்னாங்கண்ணி குழம்பு (Moong dal ponnankanni kulambu recipe in tamil)
#Jan2 #week2 Renukabala -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
*பொன்னாங்கண்ணி கீரை மசியல்*(ponnangkanni keerai masiyal recipe in tamil)
#HJஇந்த கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க மிகவும் உதவுகின்றது. இதில், புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள், வைட்டமின் சி அதிகம் உள்ளது.இதனை சமைத்து சாப்பிட்டால், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar -
-
தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
#leafதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை. Shyamala Senthil -
-
பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
#nutrition கீரை என்றாலே உடம்பிற்கு நல்லது அதிலும் இந்த கீரையை கண்ணிற்கு மிகவும் நல்லது.. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது Muniswari G -
கீரை குழம்பு & கீரை வடை (Keerai kulambu & keerai vadai recipe in tamil)
#lockdown நேரங்களில் அனைத்துப் பொருள்களும் இருமடங்கு விலையில் கிடைக்கும் வேளையில் முன்பின் அறிந்திராத வயதான கீரை விற்கும் முதியவர் எனக்கு இலவசமாக இரண்டு கட்டு கீரைகளை கொடுத்தார் . காசு வாங்க மறுத்துவிட்டார் . மிகவும் வற்புறுத்திய பின் நான் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார் . எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. தாத்தா கொடுத்த கீரையில் கீரை குழம்பு மற்றும் கீரை வடை செய்து அனைவரும் சாப்பிட்டோம். இதுபோன்ற இக்கட்டான காலங்களில் மனித நேயம் ஒன்று மட்டுமே முக்கியமானதாகும்.#lockdown#book Meenakshi Maheswaran -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
வெந்தைய கீரை உடல் சூட்டை தணிக்கும் வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நல்லது. # ve Suji Prakash -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
கீரை மசாலா (Keerai masala recipe in tamil)
கீரையை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இப்படி ஒருமுறை செய்துப் பாருங்கள்.விரும்பி சாப்பிடுவார்கள்.. Lavanya jagan
More Recipes
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
- பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
- முருங்கைக்கீரை மிளகு சீரக சூப் (Murunkai keerai milagu seeraga soup recipe in tamil)
கமெண்ட் (5)