சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/2 அரை கட்டு சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை கழுவி எடுத்து வைக்கவும்.ஒரு தட்டில் சட்னி அரைக்க 7 சின்ன வெங்காயம், 1 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், 5 பல் பூண்டு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,ஒரு இன்ச் அளவு புளி எடுத்து வைக்கவும்.
- 2
1டேபிள்ஸ்பூன் அளவு கறிவேப்பிலை கழுவி எடுத்து வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, சட்னி அரைக்க எடுத்து வைத்த உளுந்து பருப்பு, கடலை பருப்பு வரமிளகாய், சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் .
- 3
அதனுடன் 1 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து நன்கு வதக்கவும், ஒரு இன்ச் புளியையும் சேர்க்கவும்.
- 4
உப்பு சேர்த்து, 1 டேபிள்ஸ்பூன் அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும். 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
- 5
வதக்கியதை ஆறவிட்டு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு நைசாக அரைத்து விடவும். அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
- 6
கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு சிறிது கறிவேப்பிலை பொன்னிறமாக தாளித்து சிவப்பு பொன்னாங் கண்ணி கீரை சட்னியுடன் சேர்க்கவும்.சுவையான சிவப்பு பொன்னாங் கண்ணி கீரை சட்னி ரெடி😋😋 சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
-
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம் Lathamithra -
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
பொன்னாங்கன்னி கீரை கூட்டு (Ponnankanni keerai koottu Recipe in Tamil)
உடலை குளிர்ச்சியாக வைக்கவும் கண்களுக்கும் சிறந்த கூரை Lakshmi Bala -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கடையல்(ponnanganni keerai kadayal recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
#leafதூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகையாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு.காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். மேலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்த கீரை. Shyamala Senthil -
-
-
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட்