வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ்.

வெஜிடபிள் புலாவ் 🍛🍛 (Vegetable pulao recipe in tamil)

#GA4 #WEEK19 சுலபமாக செய்யக் கூடியது சத்தான வெஜிடபிள் புலாவ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1.5 கப்ஊற வைத்த அரிசி
  2. 1வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 2கேரட்
  5. 7பீன்ஸ்
  6. 1/4 கப்ஊறவைத்த பச்சைப் பட்டாணி
  7. கொத்தமல்லி -கைப்பிடி அளவு
  8. புதினா -கைப்பிடி அளவு
  9. கருவேப்பிலை -சிறிதளவு
  10. 2 மேஜைக்கரண்டிமுந்திரிப்பருப்பு
  11. 2 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  12. பட்டை - சிறிய துண்டு
  13. 2பிரிஞ்சி இலை
  14. 4கிராம்பு
  15. 1நட்சத்திர சோம்பு
  16. 1 தேக்கரண்டிசோம்பு
  17. நெய் - தேவையான அளவு
  18. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும். மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் கொத்தமல்லித் தழை, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் கேரட் பீன்ஸ் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பிறகு வேக வைத்த அரிசி சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    1:2 என்ற அளவில் தண்ணீர் சேர்ததுக் குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  6. 6

    குக்கரில் ஆவி அடங்கியதும் லேசாக கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  7. 7

    சுடசுட வெஜிடபிள் புலாவ் தயார். இதனுடன் பன்னீர் பட்டர் மசாலா, ஆனியன் பச்சடி சேர்த்து சாப்பிட அட்டகாசமாக சுவையில் இருக்கும்.

  8. 8
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes