வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#ga4 வெந்தயம் மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது சர்க்கரை வியாதிகாரர்களுக்கு மிகவும் நல்லது வெந்தயத்தை மூன்று நாட்கள் மூளைக்கட்டி காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் அரை ஸ்பூன் சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு நன்றாக குறையும் என்று நான் இன்று வெந்தயக் களி செய்யப் போகின்றேன் இது எங்கள் அம்மாவின் அம்மா எனக்கு அடிக்கடி செய்து கொடுக்கும் பலகாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நி
3 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

45நி
  1. 1

    வெந்தயத்தையும் புழுங்கலரிசியும் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    முதலில் வெந்தயத்தை நன்றாக அரைக்கவும் மிக்ஸியிலோ கிரைண்டரிலோ
    அடுத்து அரிசியை அரைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக 10 நிமிடம் அரைக்க வேண்டும்

  3. 3

    அடுப்பில் கனமான சட்டி வைத்து அரைத்து வைத்த வெந்தயம் அரிசி மாவை நன்றாக கரைத்து உப்பு சேர்த்துதோசை மாவு பதத்திற்கு வைத்துக்கொண்டு அடிபடாமல் நன்றாக கிண்ட வேண்டும் நன்கு வெந்ததா பார்க்க தண்ணீர தண்ணீரில்கையை நனைத்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக் கூடாது

  4. 4

    ஒரு தட்டில் வைத்து குழி போல் செய்து வெள்ளத்தை துருவி போட்டு அதில் நல்லெண்ணெய் விட்டு எடுத்து சாப்பிட வேண்டும்

  5. 5

    புழுங்கல் அரிசி பிடிக்காதவர்கள் பச்சரிசி சேர்த்துக்கொள்ளலாம் பச்சரிசி சேர்த்தால் கெடுவதற்கு ரொம்ப சிரமமாக இருக்கும் இந்த களியை சாப்பிடுவார்கள் கிராமங்களில்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes