ஆம்பூர் மஷ்ரூம் பிரியாணி

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

ஆம்பூர் மஷ்ரூம் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 200கிராம் மஷ்ரூம்
  2. 1டம்ளர் பாஸ்மதி அரிசி
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1பச்சை மிளகாய்
  7. 6 காய்ந்த மிளகாய்
  8. கையளவு கொத்தமல்லி, புதினா
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1 1/2டம்ளர் தண்ணீர்
  11. 1 பட்டை
  12. 1பிரியாணி இலை
  13. 1ஏலக்காய்
  14. 2 கிராம்பு
  15. மராட்டி மொக்கு
  16. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  17. 1டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    மஷ்ரூம் ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.ஒரு பவுலில் காய்ந்த மிளகாய் சேர்த்து சூடான தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பின் மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கி கொள்ளவும்.பிறகு கையளவு கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கி தயிர் கலந்து விட்டு வதக்கவும்.

  4. 4

    நன்கு வதக்கய பிறகு அரைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும்.எண்ணெய் பிரிந்து வந்ததும் மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும். தண்ணீர் விட்டு வந்ததும் பிறகு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து கொள்ளவும்.
    20 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி கழுவி சுத்தம் செய்து இதில் சேர்த்து கலந்து விடவும்.

  6. 6

    கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து விட்டு சில்வர் பாயிலால் நன்கு மூடிய பின் மூடி போட்டு வைத்து 15 நிமிடம் மீடியமான தீயில் வைத்து
    வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் திறக்காமல் அப்படியே வைக்கவும்.

  7. 7

    சூப்பரான ஆம்பூர் ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes