நீல்கிரீஸ் மின்ட் இட்லி ஃப்ரை

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

நீல்கிரீஸ் மின்ட் இட்லி ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1கைப்பிடி அளவு புதினா இலை
  2. 15மினி இட்லி
  3. ஒரு ஸ்பூன் உளுந்து
  4. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
  5. ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு
  6. 4 காய்ந்த மிளகாய்
  7. சிறியதுண்டு பெருங்காயம் கட்டி
  8. தேவையானஅளவு உப்பு
  9. 10 ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அடுப்பில் கடாய் வைத்து கடலைபருப்பு உளுந்து துவரம் பருப்பு காய்ந்தமிளகாய் பெருங்காயகட்டி சேர்த்து வறுக்கவும் பிறகு புதினா இலைகளை லேசாக பச்சைமாறாமல் வதக்கி விடவும்

  2. 2

    வறுத்த பொருட்களை ஆறவைத்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்

  3. 3

    மினி இட்லிகளை அரைத்த பொடியில் போட்டு பிரட்டி எல்லா இடங்களிலும் படும்படி நன்கு பிரட்டி வைக்கவும்

  4. 4

    அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் 4 ஸ்பூன் ஊற்றி பிரட்டியெடுத்த இட்லிகளை போட்டு மெதுவாக பிரட்டி விடவும்

  5. 5

    இட்லிகளை திருப்பி திருப்பி விட்டு புதினாபொடியை தூவி நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும் நன்றாக 2 நிமிடம் கிளறி இறக்கவும் நீல்கிரீஸ் மின்ட் இட்லி ஃப்ரை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes