தோசை பொடி(Dosai podi recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
20 நபர்
  1. 1/2 கப் வெள்ளை உளுந்து
  2. 1 கப் கடலைப்பருப்பு
  3. 50 கிராம் எள்ளு
  4. 5 ஸ்பூன் நல்லெண்ணெய்
  5. 2 பெருங்காயம்
  6. 10 பூண்டுப்பல்
  7. 2 கைப்பிடி கறிவேப்பிலை
  8. 15 காய்ந்த ஆம் ஆண்டு மிளகாய்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் வெள்ளை உளுந்தை வறுத்து எடுத்த பின் அதில் கடலைப்பருப்பை வறுக்கவும்

  2. 2

    பிறகு வருத்தத்தை ஒன்றாக எடுத்துக் கொள்ளவும் பின் அதே கடாயில் எள்ளு எடுத்து நன்கு வறுத்து அதோடு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காய கட்டியை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும் பிறகு அதில் 10 பூண்டுப்பல் தோலுடன் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும்

  4. 4

    நன்கு வதக்கிய பின் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு பிறகு அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்

  5. 5

    அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பின் ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  6. 6

    பொடி ஆகும் வரை நன்கு அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    அரைத்த பொடியை இட்லி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes