ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா

#colours1
சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1
சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
100 கிராம் வெள்ளை சுண்டலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி விட்டு பிறகு 8 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவேண்டும் பிறகு அதனை குக்கரில் வைத்து சுண்டலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 5 விசில் வரை விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்
- 2
அடுத்து ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும் அதனுடன் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சியை நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்
- 3
வதங்கிய பிறகு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் அரை டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் சேர்க்க வேண்டும்
- 4
அடுத்து அதில் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்
- 5
அடுத்து அதில் இரண்டு தக்காளிகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு எல்லாம் நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும் நாம் சிறிது நேரம் மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளலாம்
- 6
எல்லாம் வதங்கிய பிறகு நாம் அவற்றை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்
- 7
அடுத்து வேறு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் ஒரு பட்டை 3 கிராம்பு 2 பச்சை மிளகாய் 1 டீ ஸ்பூன் சீரகம் அதனுடன் ஒரு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விட வேண்டும் பொரிந்ததும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட் சேர்க்கவேண்டும்
- 8
அடுத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மேத்தி இலைகளை சேர்த்து பிறகு நாம் வேக வைத்து எடுத்துள்ள சுண்டலையும் (வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து) மசாலா கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம்(தேவைப்பட்டால் உப்பும் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்)
- 9
எல்லாவற்றையும் ஒருமுறை கலந்து விட்டு 5 நிமிடம் வரை வேக விடலாம் பிறகு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கொள்ளலாம்... இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி இலையை தூவி விட்டு ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடலாம்
- 10
இதோ மிகவும் ருசியான சத்தான ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
சன்னா மசாலா
#CF5சன்னா பட்டூரா எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான டிஷ். வெள்ளை சுண்டல் வைத்து செய்தது. punitha ravikumar -
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
#GA4 #week4 #gravyஎப்போதும் நாம் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் ரெசிபி இனி உங்கள் வீட்டிலேயே செய்யலாம். Azhagammai Ramanathan -
-
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
🏺🏺கரம் மசாலா தூள்🏺🏺(garam masala powder recipe in tamil)
#queen2 கமகமக்கும் கரம்மசாலா வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க Sowmya -
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
சென்னா மாசலா. ஹோட்டல் ஸ்டைல் (Channa masala recipe in tamil)
பூரி, சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற டிஸ் #hotel Sundari Mani -
சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
More Recipes
கமெண்ட்