பெங்களூர் ஸ்டைல் பிசிபெல்லாபாத்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

பெங்களூரில் இந்த ரெசிப மிகவும் பிரபலமான ஒரு உணவு நாமும் மிக எளிமையாக செய்து ருசிக்கலாம்

பெங்களூர் ஸ்டைல் பிசிபெல்லாபாத்

பெங்களூரில் இந்த ரெசிப மிகவும் பிரபலமான ஒரு உணவு நாமும் மிக எளிமையாக செய்து ருசிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
10 பரிமாறுவது
  1. அரை கிலோ பச்சரிசி அல்லது புழுங்கல் அரசி
  2. 250 கிராம் துவரம் பருப்பு
  3. தேவையான அளவுகாய்கறிகள்
  4. சிறிதுபீன்ஸ்
  5. 2 கேரட்
  6. சிறிதளவுஅவரக்காய்
  7. சிறிதளவுகத்திரிக்காய்
  8. எலுமிச்சை அளவுபுளி
  9. 4 பெரிய வெங்காயம்
  10. 4 தக்காளி
  11. குழம்பு மசாலா தூள்
  12. கருவேப்பிலை
  13. கா டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. சிறியதுண்டு வெல்லம்
  15. தேவையான அளவுஉப்பு
  16. தேவையான அளவுநெய்
  17. சிறிதளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு குக்கரில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் வாசனை இலை அன்னாசிப் பூ ஆகியவற்றை போட்ட வேண்டும்

  2. 2

    பிறகு தேவையான காய்கறிகளையும் வெங்காயம் தக்காளியையும் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் புளியை ஊறவைத்து கொள்ள வேண்டும் பிறகு அரிசியையும் பருப்பையும் ஒன்றாக போட்டு ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்

  4. 4

    இப்போது பட்டை கிராம்பு அனைத்தும் பொரிந்த பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும் வதங்கும் போதே தக்காளியையும் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும்
    நாம் நறுக்கி வைத்த காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  5. 5

    காய்கறி 10 நிமிடம் வதங்கிய பிறகு நாம் எடுத்து வைத்துள்ள குழம்பு மிளகாய் தூளை தேவைகேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும் அத்துடன் காட் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் காரத்திற்கு ஏற்றாற் மிளகாய்த்தூள் இதை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

  6. 6

    இப்போது பத்து நிமிடம் கழித்து நாம் அரிசியை சேர்க்கவேண்டும் அரிசியை சேர்த்து பிறகு ஒரு மடங்குக்கு ஐந்து மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும் தண்ணீர் சேர்த்த பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளிக் கரைசல் தண்ணீரை சேர்க்க வேண்டும் கடைசியாக ஒரு சிறிய துண்டு வெல்லத்தையும் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து குக்கரை மூடி போட்டு மூட வேண்டும்

  7. 7

    ஐந்து விசிலுக்கு பிறகு குக்கரை ஆப் செய்து கேஸ் வெளியான பிறகு திறந்து பார்க்கவும் சுவையான பெங்களூர் பிஸிபேளாபாத் தயாராகிவிட்டது கடைசியாக 2 டேபிள்ஸ்பூன் நெய்யை மேலே ஊற்றி பரிமாறவும் இத்துடன் காராபூந்தி யையும் சேர்த்து சாப்பிட்டால் ருசி இன்னும் அதிகரிக்கும் சூப்பரான பெங்களூர் பிசிபேளாபாத் தயாராகிவிட்டது நீங்களும் ருசித்துப்பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes