வாழைப்பழம் மால்புவா

Sanofar Nisha
Sanofar Nisha @sano96

வாழைப்பழம் மால்புவா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2வாழைப்பழம்
  2. 250மி.லிபால்
  3. 250 கிராம்சர்க்கரை
  4. 1 கப்கோதுமை மாவு
  5. 1/4 கப்ரவை
  6. தேவையான அளவு உப்பு
  7. 1/4tspசோம்பு, ஏலக்காய்-2

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு வாழை பழத்தை நறுக்கி அதில் கொஞ்சம் பால் சேர்த்து ஏலக்காய் சோம்பை போட்டு நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் ஒரு கப் கோதுமை மாவு உப்பு சேர்த்து கொஞ்சம் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்னர் இரண்டையும் நன்றாக கலக்கி லம்ஸ் இல்லாமல் கலக்கி கொள்ளவும்

  5. 5

    ஒரு சட்டியில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்

  6. 6

    பின்னர் எண்ணெய் சட்டியில் ஒரு கரண்டியில் அந்த மாவை எடுத்து ஊற்றி நன்கு பொரித்து கொள்ளவும். பொரித்த அதை அந்தப் பாகில் சேர்த்து ஒரு நிமிடம் ஊற வைக்கவும்

  7. 7

    அவ்வாறு எல்லா மாவையும் அதே போல் செய்து கொள்ளவும்

  8. 8

    நன்கு ஊறியதும் மால்புவாவை எடுத்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanofar Nisha
அன்று

Similar Recipes