மூன்று வித ஸ்வீட்களில் முன்றுவண்ணக்கொடி

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#tri
இது எனது 200 வது படைப்பு இனிப்பாகவும் நாட்டுப்பற்று மிகுந்ததாகவும் முடிந்தது என்னை தொடர்பவர்களுக்கும் குக்பேட் குடும்பத்திற்கும் எனது நன்றிகள்.

மூன்று வித ஸ்வீட்களில் முன்றுவண்ணக்கொடி

#tri
இது எனது 200 வது படைப்பு இனிப்பாகவும் நாட்டுப்பற்று மிகுந்ததாகவும் முடிந்தது என்னை தொடர்பவர்களுக்கும் குக்பேட் குடும்பத்திற்கும் எனது நன்றிகள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஆரஞ்சு நிறம் :
  2. 5 கேரட்
  3. 1 கப் சீனி
  4. 5 பாதாம்
  5. 2 ஏலக்காய்
  6. தேவைப்பட்டால் கிஸ்மிஸ்
  7. 1 கப் பால்
  8. 1 ஸ்பூன் நெய்
  9. வெள்ளைநிறம் :
  10. 2 தேங்காய்சில்
  11. மற்றும் மேற்குறிய அனைத்தும் அதே அளவுகளில்
  12. பச்சை நிறம் :
  13. 1 கொய்யாகாய்
  14. அதேப்போல் மேற்குறிய அனைத்தும்
  15. ஏலக்காய் மட்டும் சேர்க்க வேண்டாம்
  16. நடுவில் சக்கரம் :
  17. 1 நாவற்பழம்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கேரட்டை துறுவிக் கொள்ள வேண்டும் பால் காய்ச்சி ஆறவைத்துக் கொள்ள வேண்டும்
    ஏலக்காய்களை தூளக்கிக் கொள்ள வேண்டும்

  2. 2

    பாதாமை உடைத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஆரச்சு வண்ணத்திற்கு :
    ஒருக்கடாயில் 1ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும் பின் அதில் 5 கிஸ்மிஸ் பழத்தைச் சேர்த்து பொறிந்ததும் எடுத்து விடவும் அதே நெய்யில் துருவிய 5 கேரட்டைச் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வதங்கிக் கொண்டிருக்கும் போதே 1 கப் பால் ஊற்றி அதில் கேரட்டை வேக விடவும் பின் மனத்திற்காக 2 ஏலக்காயைச் சேர்க்கவும்

  5. 5

    பிறகு 1கப் சீனியைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கிளரினால் கேரட் அல்வா தயாராகும் பின் வதக்கிய 5 கிஸ்மிஸ்சை சேர்த்து இறக்கவும்

  6. 6

    வெள்ளை வண்ணம் ;
    அதேப்போல் கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் 5 பாதாம் உடைத்துச் சேர்க்கவும்

  7. 7

    வதங்கியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் 1 தேங்காய்சில்லை அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதை அதே நெய்யில் போட்டு வதக்கவும் தேங்காய் கொழுப்பு என்பதால் அதிக நேரம் வதக்கவேண்டாம் பின் 1 கப் பால் ஊற்றவும்

  8. 8

    பால் சிறிது கொதிக்க ஆரம்பிக்கவும் 2 ஏலக்காயைச் சேர்க்கவும் பின் நன்றாக கொதிக்கவும் 1 கப் சீனிச் சேர்க்கவும்

  9. 9

    பால் சுருண்டு வெந்து வரும் நெய் மீண்டும் சேர்க்க வேண்டாம் வறுத்த பாதாமை சேர்த்து இறக்கவும் தேங்காய்கோவா தயார்

  10. 10

    பச்சை வண்ணம் ;
    ஒருக்கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி பாதாமை வறுத்து பின் கொய்யாப்பழத்தை துறுவி வைத்துக் கொண்டதைச் சேர்க்கவும்

  11. 11

    பின் 1 கப் பால்ச் சேர்த்து வதக்கவும் 1கப் சீனிச் சேர்க்கவும் கொய்யாவின் மணம் மாறாமல் இருக்க நான் ஏலம்ச் சேர்க்க வில்லை கொய்யாக்காய் கோவா தயார் புதுச் சுவையாக இருந்தது

  12. 12

    நடுவில் உள்ள சக்கரம் நாவல் பழத்தினால் ஆனது. கேரட் கோவா, தேங்காய் கோவா, கொய்யாக்காய் கோவா இனிப்புக் கலந்த மூன்று வண்ணங்களில் இனிய சுதந்திரதினம் வாழ்த்துக்கள் குக்பேட் மற்றும் குக்பேட் குடும்ப நண்பர்களுக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes