கேரட் ஜவ்வரிசி பாயாசம்(CARROT JAVVARISI PAYASAM RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் நேரில் ஊறவைக்கவும். பின்பு ஜவ்வரிசியை கழுவி நீரை வடித்துவிட்டு, 2 கப் நீர் விட்டு கண்ணாடி பதத்துக்கு ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் அரை டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அரைத்த கேரட் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 3
பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். அடிக்கடி கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். முக்கால் அளவுக்கு பால் சுண்டியவுடன் அதில் வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும். பின்பு வதக்கிய கேரட்டை சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
பின்பு ஐந்து டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விடவும். பொடித்த ஏலக்காயை தூவி ஸ்டவில் இருந்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
-
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
கேரட்🥕 ஜவ்வரிசி பாயாசம்
#np2#GA4 week 8பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஜவ்வரிசியில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக ஃபைபர் அதிகம் உள்ள உணவாக ஜவ்வரிசி உள்ளது. எனவே காய்கறிகள் அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளோடு ஜவ்வரிசியை கலப்பது மூலம் சத்தான உணவை பெற முடியும். கேரட் கண்களுக்கு நல்லது. விட்டமின் சி நிறைந்தது Jassi Aarif -
-
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
கேரட் ஜவ்வரிசி கீர் (Carrot,Javvarusi kheer Recipe in Tamil)
ஐவ்வரிசியை வறுத்து எடுத்து கொண்டு வேகவைத்து, கேரட்,ஊறவைத்த முந்திரி இரண்டையும் அரைத்து எடுக்கவும் அதை வேகவைத்த ஜவ்வரிசியுடன்கலந்து பால் ,ஏலக்காய் தூள் சேர்த்து கடைசியாக சீனி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.இதில் நெய் யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து சேர்த்து பரிமாறவும் .சுவையான, சூப்பரான பாயாசம் தயார் #ChefDeena Yasmeen Mansur -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
"சேமியா கேரட் பால் பாயாசம்"(Vermicelli Carrot Milk Payasam reipe in tamil)
#MysteryBoxChallenge#npd3#சேமியான்கேரட்பால்பாயாசம்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
More Recipes
கமெண்ட் (2)