பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

பள்ளிபாளையம் சிக்கன்(pallipalayam chicken recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 20பூண்டு
  2. 4"இஞ்சி
  3. 3பச்சைமிளகாய்
  4. 1/2கிலோசிக்கன்
  5. 2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  6. மஞ்சள்த்தூள்
  7. உப்பு
  8. 15சின்னவெங்காயம்
  9. 15காய்ந்தமிளகாய்
  10. தேவையானகருவேப்பிலை
  11. 4ஸ்பூன்நல்லெண்ணை
  12. 1ஸ்பூன்கடுகு
  13. 1ஸ்பூன்சோம்பு
  14. 1/2கைஅளவுதேங்காய்
  15. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பூண்டு இஞ்சி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு இடித்து கொள்ளவும்

  2. 2

    சிக்கனை நன்கு கழுவிய பிறகு மஞ்சள்த்தூள் உப்பு இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    பின்னர் மண் சட்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்த பிறகு சோம்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் பின்னர் காயிந்த மிளகாய் சேர்க்கவும்

  4. 4

    பின்னர் கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    பின்னர் இடித்து வைத்துள்ள பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும் பின்னர் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் உப்பு சேர்க்கவும்..

  6. 6

    பின்னர் சிறிதளவு தண்ணீரை சேர்த்து சிக்கனை மூடி வேக வைத்து கொத்தமல்லி தூவி அடுப்பை அனைக்கவும்.சூடான சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes