மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4-6 சர்விங்ஸ்
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 2டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1/2 கப் ஒன்றிரண்டாக அரைத்த புதினா கொத்தமல்லி இலை
  5. 1நறுக்கிய தக்காளி
  6. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 2 டீஸ்பூன் மட்டன் மசாலா
  9. தேவையானஅளவு உப்பு
  10. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  11. மசாலா அரைக்க
  12. 2 டீஸ்பூன் தனியா
  13. 1 டீஸ்பூன் கசகசா
  14. 1 டீஸ்பூன் மிளகு
  15. 1 டீஸ்பூன் சீரகம்
  16. 1 டீஸ்பூன் சோம்பு
  17. 1 டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  18. 5-6 முந்திரி
  19. 1/2 கப் துருவிய தேங்காய்
  20. 2 வர மிளகாய்
  21. 1/4 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வறுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து தனியாக வைக்கவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு ஒன்று இரண்டாக புதினா கொத்தமல்லியை அரைத்து அதில் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்

  3. 3

    மட்டனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்றாக வதக்கவும்... அதன் பிறகு இதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் மட்டன் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் விட்டு வேகவிடவும் (5 விசில் விடவும்)

  4. 4

    மட்டன் நன்றாக வெந்த பிறகு அரைத்த மசாலா கலவையை இதனுடன் சேர்த்து மீண்டும் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு விசில் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

  5. 5

    இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் சுவையான மட்டன் சால்னா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes