வெண்டைக்காய் மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

வெண்டைக்காய் மோர் குழம்பு(vendakkai mor kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 6வெண்டைக்காய்
  2. 1கப் சிறிது புளித்த தயிர்
  3. 1டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை ஊற வைத்தது
  4. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. உப்பு
  6. 1துண்டு இஞ்சி சிறிதளவு
  7. 4சின்ன வெங்காயம்
  8. 2டீஸ்பூன் தேங்காய் துருவல்
  9. 1டீஸ்பூன் தனியா
  10. 3பச்சை மிளகாய்
  11. 1டீஸ்பூன் சீரகம்
  12. 1/2டீஸ்பூன் மிளகு
  13. தாளிக்க:
  14. 2டீஸ்பூன் ஆயில்
  15. 1/2 டீஸ்பூன் கடுகு
  16. 1வரமிளகாய்
  17. சிறிதுகறிவேப்பிலை
  18. 1சிட்டிகை பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    6 வெண்டைக்காயை கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிது கறிவேப்பிலையை கழுவி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு,1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய் நறுக்கிய வெண்டைக்காய் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நன்கு வதக்கி விடவும்.

  2. 2

    மோர் குழம்பு செய்வதற்கு அரைக்க: 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு ஊற வைத்தது, 1 துண்டு இஞ்சி, 3 பச்சை மிளகாய், 1/2 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் தனியா, 4 சின்ன வெங்காயம், 2 டீஸ்பூன் தேங்காய் துருவல், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைக்கவும்.

  3. 3

    1 கப் புளித்த தயிர் எடுத்து வைக்கவும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் தயிர், உப்பு சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து, மோர் குழம்பை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

  4. 4

    ஓரங்களில் நுரை வரும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, தாளித்து, வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து விடவும். சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes