பன்னீர் வெஜ் ஆம்லெட்(paneer veg omelette recipe in tamil)🤤😋

Mispa Rani
Mispa Rani @cook_20136737

பன்னீர் வெஜ் ஆம்லெட்(paneer veg omelette recipe in tamil)🤤😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர்
  1. 1 பாக்கெட் பன்னீர்
  2. 3 வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய்
  4. 1 தக்காளி
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2 ஸ்பூன் தனியா தூள்
  8. தேவையானஅளவுஉப்பு
  9. 1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  10. 2 ஸ்பூன் கடலை மாவு
  11. 2 ஈர்க்கு கறிவேப்பிலை
  12. சிறிதளவுமல்லி இலை
  13. 5 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் சேர்த்து கிளறி பொடியாக நறுக்கி வைத்த பனீர் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இரண்டு நிமிடம் வதங்கியவுடன் வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதில், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    பிறகு அதில் 2 ஸ்பூன் கடலை மாவு, கரம் மசாலா தூள், கறி மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கிளறிக் கொள்ள வேண்டும்.

  4. 4

    இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து அதில் விட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு, மிதமான தீயில், மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

  5. 5

    இன்னொரு புறமும் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான பன்னீர் வெஜ் ஆம்லெட் தயார்.

    குறிப்பு: திருப்பும் போது மாத்திரம் பார்த்து திருப்ப வேண்டும். பன்னீர் துண்டுகளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மிகவும் மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும். செய்து பாருங்களேன் 🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes