கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

நம் வீட்டில் கேக் அல்லது பிரவுனி செய்யும் பொழுது பொதுவாக மைதாமாவு தான் பயன்படுத்துவோம். இனிமேல் அதற்கு பதிலாக இந்த சிறு தானியத்தை வைத்து பிரவுனி செய்துபாருங்கள்.

கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)

நம் வீட்டில் கேக் அல்லது பிரவுனி செய்யும் பொழுது பொதுவாக மைதாமாவு தான் பயன்படுத்துவோம். இனிமேல் அதற்கு பதிலாக இந்த சிறு தானியத்தை வைத்து பிரவுனி செய்துபாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2 முட்டை
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 3/4 கப் சன் பிளவர் ரீபைண்ட் ஆயில்
  4. 1/2 கப் கோகோ பவுடர்
  5. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  6. 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டேபிள்ஸ்பூன் காப்பித்தூள்
  8. 3/4 கப் கேழ்வரகு மாவு
  9. 1/4 கப் நறுக்கிய சாக்லேட் துண்டுகள்
  10. சிசீலிங் தட்டு
  11. 2 ஸ்கூப் ஐஸ்க்ரீம்
  12. 3 டேபிள்ஸ்பூன் சாக்லெட் சாஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை, 1/2 கப் சர்க்கரை, 3/4 கப் சன் ஃபிளவர் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் அதில் 1/2 கப் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும்.

  3. 3

    இதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 டீஸ்பூன் உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது இதில் 3/4 கப் கேழ்வரகு மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  5. 5

    இதனுடன் 1/4 கப் சிறிதாக நறுக்கிய சாக்லெட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

  6. 6

    இப்பொழுது அதை ஒரு கேக் டின்னில் மாற்றிக் கொள்ளவும். (கேக் டின் மேல் பேக்கிங் ஷீட் போட்டுக்கொள்ளவும்)

  7. 7

    இதை ஓவனில் 180°C 25 நிமிடம் முதல்- 30 நிமிடம் வரை பேக் செய்து கொள்ளவும்.

  8. 8

    இப்பொழுது சிசீலிங் தட்டை சூடுபடுத்திய பின் அதன் மேல் ஒரு பிரவுனி துண்டு வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் சாஸ் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakarasaathamum_vadakarium
அன்று
Chennai , India

Similar Recipes