சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்)

சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)

இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2.5 kg
  1. 500 கிராம்ராகி
  2. 100 கிராம் பொட்டுக்கடலை
  3. 100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை
  4. 100 கிராம் பாதாம் பருப்பு
  5. 100 கிராம் அளவு சாமை
  6. 100 கிராம் நரி பயறு
  7. 100 கிராம் குண்டு உளுத்தம் பருப்பு
  8. 100 கிராம் சம்பா கோதுமை
  9. 100 கிராம் கம்பு
  10. 100 கிராம் தட்டைப்பயிறு
  11. 100 கிராம் சோயா சுண்டல்
  12. 100 கிராம் பாசிப்பருப்பு
  13. 100 கிராம் பாசிப்பயறு (பச்சைப்பயிறு)
  14. 100 கிராம் கோதுமை
  15. 100 கிராம் குதிரைவாலி
  16. 100 கிராம் வெள்ளை சோளம்
  17. 100 கிராம் சிவப்பு சோளம்
  18. 100 கிராம் வரகு
  19. 100 கிராம் திணை
  20. 100 கிராம் கவுனி அரிசி
  21. 100 கிராம் கொள்ளு
  22. 100 கிராம் சிவப்பு அவல்
  23. 100 கிராம் பார்லி
  24. 100 கிராம் ஜவ்வரிசி
  25. 100 கிராம் புழுங்கல் அரிசி

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேற்கூறிய தேவையான அனைத்து தானியங்கள் மற்றும் சிறுதானிய பொருட்களை தலா 100 கிராம் எடுத்துக் கொள்ளவும். (வேர்க்கடலை வேண்டும் என்பவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடும்போது சிக்கு வாசம் வரும். வேர்க்கடலை நான் சேர்க்கவில்லை. முந்திரி பிஸ்தா இவைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறைவாக சேர்க்க வேண்டும். இல்லையென்றால் மெசினில் கொடுத்து அரைக்கும் பொழுது அந்தத் துணியில் ஒட்டிக் கொள்ளும் அரவை சரியாக வராத) நான் பாதாம் மட்டும் 100 கிராம் சேர்த்துள்ளேன்

  2. 2

    ராகி தானியம் மட்டும் அரை கிலோ எடுத்துக் கொள்ளவும். ராகியில் சத்து அதிகம். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.மேலும் கஞ்சிக்கு நல்ல நிறம் கொடுக்கும். அதனால் அதிக அளவு ராகி சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    முதலில் ராகியை இரண்டு முறையாக வாணலியில் நன்றாகசிவக்க வறுக்கவும். சிவக்க வறுக்கும் பொழுது ராகி கருத்தார் போல இருக்கும். தீய விட வேண்டாம். நன்றாக வருபட பொரியும் சத்தம் கேட்கும்.இப் பொழுது இதை எடுத்து ஒரு பேப்பரில் கொட்டி கொள்ளவும். இதேபோல் மற்ற தானியங்கள், சிறு தானியங்கள் அனைத்தையும் நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.

  4. 4

    ஒவ்வொன்றையும் தனித்தனியாக சிவக்க வறுத்து ஒரு பெரிய பேப்பரில் கொட்டி ஆறவிடவும். நன்றாக சிவக்க வறுக்க வில்லை என்றால் மெஷினில் கொடுத்து அரைக்கும் பொழுது மாவு நைசாக வராது. கஞ்சி வைக்கும் பொழுது நல்ல வாசனை வராது.சுவையும் குறைவாக இருக்கும்.மேலும் நன்றாக வறுத்து விடுவதால் பத்து நிமிடத்தில் கஞ்சியை கொதிக்க வைத்தால் வெந்துவிடும். ஆகையால் மிக நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

  5. 5

    எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து ஒரே பேப்பரில் அல்லது இரண்டு பேப்பரில் கொட்டி கரண்டியால் நன்கு கிளறி நன்றாக ஆற விட வேண்டும். நன்கு ஆறிய பிறகு மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கெட் அல்லது ஒரு தூக்கு போவனியில் மாற்றிக் கொள்ளவும். மாவு மெஷினுக்கு கொண்டு சென்று நைசாக அரைத்து எடுத்து வந்து மூடியைத் திறந்து ஒரு மணி நேரம் வரை நன்கு ஆறவிடவும்.

  6. 6

    நன்கு ஆறிய பிறகு ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னர் பாட்டிலில் சேர்த்து டைட்டாக மூடி வைத்துக் கொள்ளவும். தேவையானவற்றை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும். எனக்கு கீழ்கண்ட பாட்டிலுக்கு நான்கரை bottle மாவு வந்தது. அவ்வப்போது தீர தீர ஒரு ஒரு பாட் டலாக எடுத்து செலவு செய்து கொள்ளலாம்.

  7. 7

    4அல்லது 5டேபிள் ஸ்பூன் அளவிற்கு சத்துமாவு எடுத்துக் கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் மாவை சேர்த்து இரண்டு டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். கட்டி இல்லாமல் கரைத்து பின்பு அடுப்பில் மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடம் வரை நன்கு கொதிக்க விடவும். கட்டி விழாமல் இருக்க கரண்டியில் கிளறி கொண்டே இருக்கவும்.இதில் நீங்கள் பால் நாட்டுச் சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்து பருகலாம். உப்பு மோர் சேர்த்து பருகலாம்.சிறிய வெங்காயம் பொடியாக அறிந்து சேர்த்து குடித்தால் கூழ் போல இருக்கும்.

  8. 8

    ஒருவருக்கு ஒரு பெரிய டம்ளர் அளவு என்று தினமும் அனைவரும் இந்த கஞ்சியை எடுத்துக் கொண்டால் நமக்கு அன்றாட வேலை செய்வதற்கு தேவையான சக்தி உடலுக்கு கிடைக்கும். நாம் திட உணவு எடுத்துக் கொள்வது குறையும்.. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை நோயாளிகள் இதர நோயாளிகள் குழந்தைகளுக்கு தேவையான சத்து கிடைக்க என பல வழிகளிலும் இந்த சத்துமாவு கஞ்சி நன்மை கொடுக்கும்.. நன்றி. 🙏😊💪👍

  9. 9

    குழந்தைகளுக்கு வெல்லப்பாகு சேர்த்து உருண்டைகளாக பிடித்தும் கொடுக்கலாம். ஏலக்காய் பொடி செய்து சேர்த்து பாயாசம் போல செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes