பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

பஞ்சாபி தால் தட்கா(punjabi dal tadka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம் மைசூர் பருப்பு
  2. 2 தக்காளி
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தாளிக்க
  8. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  9. 2 காய்ந்த மிளகாய்
  10. 1 தேக்கரண்டி சீரகம்
  11. 1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைசூர் பருப்பை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். குழம்பு செய்யும் பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை சேர்க்கவும் இதோடு தக்காளியை அரைத்து விழுதாக சேர்க்கவும் கூடவே மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து சிறு தீயில் 20 நிமிடங்கள் வேக விடவும்.

  2. 2

    பருப்பு குழையாமல் வேக வேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து நெய் உருகியதும் சீரகம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து கடைசியாக காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கலந்து பருப்பில் சேர்க்கவும். முடிவில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Farheen Begam
Farheen Begam @Farheenbegam
அன்று

Similar Recipes