தால் தடுக்கா(dal tadka recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

தால் தடுக்கா(dal tadka recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 150 கிராம் மைசூர் பருப்பு
  2. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 2 தக்காளி
  5. கொத்தமல்லி இலை
  6. தாளிக்க
  7. 2 ஸ்பூன் நெய்
  8. 2 வர மிளகாய்
  9. 4 பல் பூண்டு
  10. 1/4 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் கழுவியை மைசூர் பருப்பு இதோடு இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள், அரைத்த தக்காளி விழுது இதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் வேகவிட்டு எடுக்கவும்

  2. 2

    குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து லேசாக கடைந்து கொள்ளவும். ஒரு கடாயில் நெய் சேர்த்து காய்ந்ததும் வரமிளகாய் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வறுக்கவும். கடைசியில் காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து அடுப்பில் இருந்து எடுத்து குக்கரில் சேர்க்கவும்.

  3. 3

    இரண்டு நிமிடம் குக்கரில் மூடி போட்டு வைக்கவும் அதன்பின் பரிமாறினால் மெய் மனத்தோடு சுவையான தால் தடுக்கா சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes