சீஸி ப்ரட் பீட்ஸா மற்றும் பழ கப்ஸ்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
Kayalpatnam

வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஸா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 10ப்ரட் துண்டுகள்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1காரட்
  5. 1குடை மிளகாய்
  6. 3பூண்டு பற்கள்
  7. 1/2 தேக்கரண்டிமிளகு தூள்
  8. 1 கப்தக்காளி சாஸ்
  9. 1 கப்சீஸ்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1 மேசைக்கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகள் அனைத்தையும் சிறிதாகவோ அல்லது நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    முதலில் எண்ணையை கடாயில் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.

  3. 3

    பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு வேகும் வரை  வதக்கவும். இப்பொது அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.

  4. 4

    இப்பொது நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், காரட் சேர்த்து  சில  நிமிடங்கள் கிளறவும்.காய்கறிகள் நன்கு வேக வேண்டிய அவசியம் இல்லை.

  5. 5

    முதலில் ப்ரட்டின்  மீது வட்ட வடிவிலான மூடியை வைத்து அதனை சுற்றி வெட்டி எடுக்கவும். அதை எண்ணெய் தடவிய மவ்வின்ஸ் தட்டில் மெதுவாக வைக்கவும்.

  6. 6

    இப்பொது தயாரித்த காய்கறி கலவையை சாஸ் தடவிய ப்ரட் கப்பில் வைத்து மேலே துருவிய சீஸ் போடவும்.

  7. 7

    200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் நான்கு நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான ப்ரட் பீட்ஸா கப் தயார்

  8. 8

    பழங்களோடு கோக்கோ சேர்த்தும் பேக் செய்து சாப்பிடலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hameed Nooh
Hameed Nooh @cook_13961642
அன்று
Kayalpatnam
cooking innovative recipes is my passion and nowadays it becomes my hobby too.
மேலும் படிக்க

Similar Recipes