தக்காளி 🍅 மீன் 🐟குழம்பு

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தக்காளிசெய்முறை

தக்காளி 🍅 மீன் 🐟குழம்பு

#தக்காளிசெய்முறை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் (துருவிய)தேங்காய்
  2. 1/2 தேக்கரண்டிசீரகம்
  3. தண்ணீர்
  4. 1/4 கிலோமீன் 🐟
  5. 2 மேசைக்கரண்டிதேங்காய் எண்ணெய்
  6. 1 தேக்கரண்டிகடுகு
  7. 1/4 தேக்கரண்டிவெந்தயம்
  8. 1 கப் சிறியவெங்காயம் - பொடியாக
  9. 2 நறுக்கியபச்சை மிளகாய்
  10. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  11. 3 (விழுதாக்கி கொள்ளவும்)தக்காளி
  12. 1/2 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  13. 3 தேக்கரண்டிமிளகாய் தூள்
  14. 1 தேக்கரண்டிமல்லித்தூள்
  15. சிறிதுகறிவேப்பிலை
  16. தேவையான அளவுதேங்காய் எண்ணெய்
  17. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்து அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    அடுத்தது ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணையை சூடேற்றிய பிறகு கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

  3. 3

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்

  4. 4

    இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்

  5. 5

    குழம்பு கொதிநிலையை அடைந்தவுடன் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்

  6. 6

    மீனை கரண்டியை வைத்து கிளறாமல் மண் சட்டியை மெதுவாக தூக்கி அசைத்து கலக்கவும்

  7. 7

    மேலும் ஐந்து நிமிடத்திற்கு மீன் குழம்பை மூடிய நிலையில் சமைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes