நெத்திலி மீன் ஃப்ரை

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500 கிராம்நெத்திலி மீன்
  2. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1/4 டீஸ்பூன்பெப்பர் தூள்
  5. 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 டீஸ்பூன்கரம் மசாலா
  7. 1 1/2 டீஸ்பூன்லெமன் ஜூஸ்
  8. 2 டேபிள் ஸ்பூன்சோள மாவு
  9. 1 டீஸ்பூன்மைதா மாவு
  10. 1 டீஸ்பூன்அரிசி மாவு
  11. கொஞ்சம்கறிவேப்பிலை
  12. தேவையான அளவுஉப்பு
  13. பொரிப்பதற்கு தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெத்திலி மீனை கழுவி சுத்தமாக்கிக் கொள்ளவும்.

  2. 2

    சுத்தமாக்கிய மீனில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெப்பர் தூள், கரம் மசாலா தூள், லெமன் ஜூஸ், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

  3. 3

    இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, மைதா மாவு எல்லாம் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக மிக்ஸ் பண்ணி அரை மணி நேரம் வைக்கவும்.

  4. 4

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அந்த எண்ணெயில் முதலில் கறிவேப்பிலையை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து அதே‌ எண்ணெயில் நெத்திலி மீனைப் போட்டு நன்றாக ஃப்ரை செய்து கிறிஸ்ப்பியானதும் எடுக்கவும்.

  6. 6

    இதன் மீது பொரித்த கறிவேப்பிலையை‌ தூவி பரிமாறவும்.

  7. 7

    சுவையான,கிறிஸ்ப்பியான நெத்திலி மீன் ஃப்ரை ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes