மீன் 🐟 மஞ்சூரியன் (Fish Manjurian Recipe In Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

மீன் 🐟 மஞ்சூரியன் (Fish Manjurian Recipe In Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10பெரிய மீன் துண்டுகள்
  2. 1/2 ஸ்பூன்மிளகாய்த் தூள்
  3. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  4. தேவையான அளவுஉப்பு, எண்ணெய்
  5. கிரேவி தயாரிக்க:
  6. 7 பல்பூண்டு
  7. 3வெங்காயம்
  8. 1/2 நறுக்கியதுகுடை மிளகாய்
  9. 4 ஸ்பூன்தக்காளி சாஸ்
  10. 8 இலைகள்கறிவேப்பிலை
  11. 3 ஸ்பூன்நெய்
  12. வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனில் மஞ்சள், மிளகாய், உப்பு சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் வைக்கவும்.

  2. 2

    மீனை எண்ணையில் முக்கால் பாகம் வேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும்.

  3. 3

    இப்பொழுது மீதமுள்ள எண்ணையில் பூண்டை 2 நிமிடம் வறுத்து அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி வெங்காயம் நன்கு வெந்து உடைந்ததும் குடைமிளகாயும் சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்க வேண்டும்.தக்காளி சாஸ் சேர்க்கவும்.

  4. 4

    பின் அதில் 1 ஸ்பூன் கார்ன் ஃபிளாரை 3/4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

  5. 5

    தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நன்கு 10 நிமிடம் கொதித்ததும் பொரித்து வைத்த மீனையும் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes