மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# பால்

இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் பால்
  2. 1 கப் ஜவ்வரிசி
  3. 6 டேபிள்ஸ்பூன் மாம்பழ ப்யூரி
  4. 1/4 கப் சர்க்கரை
  5. 4 டேபிள்ஸ்பூன் மில்க் மெயின்ட்
  6. 1/2 ஸ்பூன் ஏலம்
  7. 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  8. அலங்கரிக்க:
  9. பாக்கெட்ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி
  10. 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  11. 3ரசகுல்லா

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  2. 2

    கொதி வந்ததும் ஜவ்வரிசி சேர்த்து மெல்லிய தீயில் இருபது நிமிடங்கள் வரை வேகவிடவும்

  3. 3

    பின் சர்க்கரை மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பின் ஏலத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    இதில் சிறிது எடுத்து தனியாக வைத்து விட்டு மீதமுள்ளதில் மாம்பழ ப்யூரி சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்

  6. 6

    இப்போது இரண்டிலும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  7. 7

    ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி செய்ய:

  8. 8

    2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  9. 9

    கொதி வந்ததும் சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கிறிஸ்ட்டல்லை கொட்டி நன்கு கிளறவும்

  10. 10

    ஐந்து நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி ட்ரேயில் ஊற்றி செட் செய்யவும்

  11. 11

    இப்போது உயரமான டம்ளரில் முதலில் ஜெல்லி ஐ போடவும்

  12. 12

    பின் மாம்பழ பால் கலவையை ஊற்றவும்

  13. 13

    பின் மீண்டும் சிறிது ஜெல்லி ஐ போடவும்

  14. 14

    பின் அதன் மேல் வெள்ளை நிற பால் கலவையை ஊற்றவும்

  15. 15

    அதன் மேல் மாம்பழ பால் கலவையை ஊற்றவும்

  16. 16

    பின் மீண்டும் சிறிது ஜெல்லி ஐ போடவும் அதன் மேல் ரசகுல்லா வை வைத்து அலங்கரிக்கவும்

  17. 17

    லேயர் லேயராக பார்க்க மிகவும் நன்றாக இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes