சட்டிஸ்கர் முத்தியா (muthiya Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

சட்டிஸ்கர் முத்தியா (muthiya Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் அரிசி மாவு
  2. 1/4 தேக்கரண்டி உப்பு
  3. 1 தேக்கரண்டி கறுப்பு எள்
  4. 1 தேக்கரண்டி எண்ணெய்
  5. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் மாவில் ஊற்றிக் கிளறவும்.

  2. 2

    மாவை நன்கு கிளறி வைக்கவும். சற்று ஆறியதும் நீள் வடிவில் கொழுக்கட்டைகளாகச் செய்யவும்.

  3. 3

    ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் செய்து வைத்த கொழுக்கட்டை களைச் சேர்த்து வேக வைக்கவும்.

  4. 4

    வெந்ததும் கொழுக்கட்டை களைச் தனியே எடுத்து ஆற வைக்கவும்.

  5. 5

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறுப்பு எள் சேர்க்கவும்.

  6. 6

    எள் வெடித்ததும் வேக வைத்த கொழுக்கட்டை களைச் சேர்த்து நிறம் மாறும் வரை கிளறி இறக்கவும்.

  7. 7

    இப்போது சட்டிஸ்கர் முத்தியா தயார். இதை கொத்தமல்லி தூவி சட்னி அல்லது தக்காளி சட்னியோடு பரிமாறவும் ‌.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes