தமிழ் நாடு ஸ்பெஷல் உளுந்தங்களி (Uluthuga Kali Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

தமிழ் நாடு ஸ்பெஷல் உளுந்தங்களி (Uluthuga Kali Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் கறுப்பு உளுந்து
  2. 1/4கப் பச்சரிசி
  3. 11/2கப் கருப்பட்டி உடைத்தது
  4. 11/2கப் தண்ணீர்
  5. 1/4கப் + 1 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கறுப்பு உளுந்து, பச்சரிசியை நன்கு மாவாகப் பொடித்து, சலித்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கருப்பட்டி, தண்ணீரை கனமான வாணலியில் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கருப்பட்டி நன்கு கரைந்ததும் வடிகட்டவும்.

  3. 3

    வடிகட்டிய கருப்பட்டி தண்ணீரை மறுபடியும் வாணலியில் ஊற்றவும்.

  4. 4

    கருப்பட்டித் தண்ணீர் கொதித்ததும் 1/4 கப் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும்.

  5. 5

    மாவை அதில் சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    களி நன்கு வெந்து வாணலியில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.

  7. 7

    ஒரு கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சிறிதளவு களியை அதில் சேர்த்து கிண்ணத்தை சுழற்றவும். களி உருண்டை தயார்.

  8. 8

    மீதமுள்ள களியையும் கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes